பொய் சொல்லி பிழைப்பதையே முழு நேர பணியாக செய்யும் தர்மபுரி எம்.பி.செந்தில்குமார் - மினி கிளினிக் விவகாரத்திலும் பொய் பரப்பினார்!

Update: 2021-04-25 04:30 GMT

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏ'க்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும், மற்ற தினங்களில் தொகுதி மக்களுக்காக அவர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அதனை களைய உழைக்க வேண்டும் ஆனால் கடந்த 2019'ம் ஆண்டில் மத்திய அரசின் மீது வெறுப்பு அரசியலை விதைத்து அதன் மூலம் வாக்குகளை வாங்கி எம்.பி'யாகிய தர்மபுரி எம்.பி.செந்தில்குமார் சமூக வலைதளங்களில் முழுநேரமும் பொழுதை போக்கி கொண்டு போதாக்குறைக்கு பொய் பரப்புரைகளை வேறு மேற்கொண்டு எம்.பி பதவி என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று தனது ட்விட்டர் பதிவில் சமீபத்தில் தமிழக அரசால் துவங்கப்பட்ட "அம்மா மினி கிளினிக்" திட்டம் மூடுவிழா கண்டதாகவும், இனி "அம்மா மினி கிளினிக் செயல்படபோவதில்லை என போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் உண்மை என்னவெனில் கொரோனோ பணிக்காக மருத்துவர்கள் அதிகளவில் சென்றுள்ளதால் நர்சுகள் கண்காணிப்பில் மினி கிளினிக்'க்குகள் இயங்கும் என தமிரக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தற்போது தமிழகத்தில் உள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்குகளில் பணிபுரிந்து வந்த டாக்டர்கள் மட்டும் அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு கொரோனாலபணிக்காக மாற்றப்பட்டுள்ளனர். நர்சுகள் மற்றும் மருத்துவ உதவியாளர் கண்காணிப்பில் மினி கிளினிக்குகள் தொடர்ந்து இயங்கும். டாக்டர்கள் இல்லை 'என்பதால் மினி கிளினிக்கு கள் மூடப்படாது'.

எந்த சூழலிலும் மினி கிளினிக்குகள் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. தடுப்பூசி மையங்களாகவும், மருத்துவம் சார்ந்த பணிகளுக்கும் மினி கிளினிக்குகள் பயன்பட்டு வருகின்றன. மேலும் நோயாளியின் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கும் முக்கியமான பணிகளும் மினி கிளினிக்குகளில் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே தேவையற்ற வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம். மினி கிளினிக்குகள் எந்த காலத்திலும் மூடப்படாது" இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி அதுவும் செந்தில்குமார் மருத்துவர் வேறு இப்படி மக்களை குழப்பி அமன் மூலம் வரும் பயனை தங்களுக்கு அரசியல் சாதகமாக்க முயல்வது இழிவிலும் இழிவான அரசியல் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News