ஜுபிளண்ட் பார்மா தனிநபர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை வழங்கும் - வைரல் செய்தி உண்மையா?
இந்தியாவை தற்போது பேரழிவுக்கு உள்ளாகியுள்ள கொரோனா நோய்க்கு எதிராக மருந்து மற்றும் ஆக்சிசென் தேவைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் வலம்வருகின்ற நிலையில், அதே நேரத்தில் போலியான செய்திகளும் மக்களைத் தவறான வழிக்குக் கொண்டு செல்லும் வகையில் போலி செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றது. அதே போல் ஒரு செய்தியாக மக்களுக்குத் தேவையான ரெம்டெசிவிர் மருந்து,மருத்துவரின் பரிந்துரையோடு ஜுபிளண்ட் பார்மாவுக்கு மின்னஞ்சல் அனுப்புவது மூலம் பெறலாம் என்ற செய்தி வைரலாகி வருகின்றது.
பிரபலங்கள் உட்படப் பலர் இந்த செய்தியைப் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்த டிட்விட் ஒன்றை டோலிவுட் இயக்குநர் நந்தினி ரெட்டி பகிர்ந்துள்ளார். அதே செய்தி பலர் டிவிட்டர் பயனாளர்களால் பகிரப்பட்டுள்ளது. ஜுபிளண்ட் பார்மா தனிநபர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை ஏற்பாடு செய்யும் என்ற செய்தி தவறானது ஆகும்.
நந்தினி ரெட்டி டிவிட்கு பதிலளிக்கும் விதமாக, மருத்துவமனைகளுக்கு விநியோகம் குறைவாகவே உள்ளது என்று ஜுபிளண்ட் பார்மாவில் இருந்து சாய் சரண் சிலுகுல்லா டிவிட் செய்திருந்தார்.
தேவையான ஆவணங்கள் வைத்து மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் ஊசி போடமுடியும் என்ற அரசாங்கத்தின் வழிகாட்டுதலைப் படி மருத்துவமனைகளுக்கு மட்டுமே ஜுபிளண்ட் பார்மா மருந்து வழங்கி வருகின்றது. தற்போது வைரலாகி வரும் செய்தி குறித்து ஒரு செய்தியும் ஜுபிளண்ட் பார்மா இணையதளத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை.
ரெம்டெசிவிர் மருந்து கொரோனா தொற்றுக்கு எதிராக முதலில் அனுமதி வழங்கிய ஆன்டி வைரல் மருந்தாகும். இந்த மருந்து ஏழை மக்களுக்கும் கிடைக்கும் வகையில் கிடைக்கும் வகையில் ஜுபிளண்ட் பாரதீய அறக்கட்டளை தனித்துவமாகப் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.