கொரோனா தொற்றை நாசியில் எலுமிச்சை சாறு ஊற்றுவதன் மூலம் குணப்படுத்த முடியுமா-வைரல் செய்தி உண்மையா?
தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவிக் கொண்டிருக்கும் வேளையில் கொரோனா தொற்றின் வீட்டுச் சிகிச்சை குறித்த ஆதாரமற்ற தகவல்களும் மற்றும் போலி செய்திகளும் சமூக வலைத்தளங்களில் வலம்வந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் அதே போன்று ஒரு வைரல் வீடியோவாக, எலுமிச்சை பழம் சாற்றினை மூன்று சொட்டு மூக்கில் இடுவதன் மூலம் கொரோனவை குணப்படுத்தலாம் என்று கூறப்பட்டு வைரலாகி வருகின்றது.
இவ்வாறு செய்வதன் மூலம் இந்த கொடிய நோயிலிருந்து உயிரிழப்பதைத் தவிர்க்கலாம் என்று ஒருவர் கூறுவதைக் காணமுடிந்தது. இவ்வாறு எலுமிச்சை பழம் சாற்றினை ஊற்றுவதன் மூலம் அது ஐந்து நிமிடத்தில் குணப்படுத்தும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்த வைரல் செய்தியானது போலியானது ஆகும். எலுமிச்சை சாறு கொரோனா தொற்றைக் குணப்படுத்தாதது. இது போன்ற வைரல் செய்தி போலியானது என்பதை PIB தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவியல் பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை.
மேலும் இதுகுறித்து உலக சுகாதார மையமும் தனது இணையதள பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே தற்போது எலுமிச்சை சாற்றினை மூக்கில் ஊற்றினால் கொரோனா குணமாகும் என்பது போலியான செய்தியாகும். இதற்கான அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை.
source: https://www.latestly.com/social-viral/fact-check/covid-19-virus-can-be-killed-by-pouring-lemon-juice-in-nose-pib-fact-check-reveals-truth-behind-fake-video-going-viral-on-social-media-2455515.html