சமூக ஊடகத்தில் தற்போது பரப்பாக ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றது. அதில் இந்த கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில், இந்துக்கள் தங்கள் கடவுள் மேல் நம்பிக்கையை இழந்ததால், இந்து சிலைகளை உடைத்து இஸ்லாத்திற்கு மாறிவருவதாக அதில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
அந்த வீடியோவில் ஹிந்தி குரல் ஒன்று ஒலித்தது, "கொரோனாவால் இந்தியா பேரழிவுக்கு சென்றுள்ளது, மனித நேயம் இழந்துவிட்டது. தங்கள் கடவுள் தங்களை காக்கவில்லை என்பதற்காக இந்துக்கள் சிலையை உடைத்துள்ளனர். அவர்கள் ஒன்றுகூடி இந்து மதத்தை மறுத்து இஸ்லாமிற்கு மாற்றமடைகின்றனர்,"என்று கூறப்பட்டிருந்தது. பேஸ்புக்கிலும் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
இந்த வீடியோ குறித்து இந்தியா டுடே உண்மை கண்டறியும் ஆராய்ச்சி மேற்கொண்டது. இது தவறான குற்றச்சாட்டுகளைக் கொண்டுள்ளது என்று தெரிவித்தது. இந்து உண்மையில் 2019 இல் அகமதாபாத்தில் AMC சபர்மதி நதிக்கரை ஸ்வாட்ச் சபர்மணி மிஷன் கீழ் சுத்தம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்டது.
மேலும் இந்த வீடியோ குஜராத் செய்தி தளத்தின் யூடூப்பில் காணப்பட்டது. அந்த வீடியோ ஆகஸ்ட் 11 2019 இல் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் பின்னணியும் தற்போது வைரலாகி வரும் வீடியோவின் பின்னணியுடன் ஒத்துப்போகிறது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியச் செய்தி தளங்களிலும் கண்டறியப்பட்டது.
செப்டம்பர் 9 2019 இல் அகமதாபாத்தில் தசமா சிலையைத் தவறாகக் கணபதி சிலை என்று பகிரப்பட்டு வருகின்றது. தற்போதைய வைரல் வீடியோவை இந்த செய்திக் கட்டுரையில் காணவில்லை என்றாலும், IAS மற்றும் AMS தலைவர் விஜய் நெஹ்ரா டிவிட்டில் காணப்பட்டது.
எனவே தற்போது வைரலாகி வரும் வீடியோவிற்கும் தற்போதைய கொரோனா தொற்று நிலைமைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. மேலும் இது 2019 இல் ஸ்வச் சபர்மதி மிஷன் போது எடுக்கப்பட்டது.
source: https://www.indiatoday.in/fact-check/story/fact-check-2019-video-of-swachh-sabarmati-mission-shared-as-hindus-destroying-idols-during-covid-1801275-2021-05-11