கேரளா தம்பதி ஆம்புலன்ஸில் ஹனுமான் புகைப்படம் இருந்ததால் ஏற மறுத்தனரா - வைரல் செய்தி உண்மையா?

Update: 2021-05-16 06:57 GMT

சமூக வலைத்தளங்களில் தற்போதைய வைரல் செய்தியாக, கேரளாவில் ஒரு கிறிஸ்தவ தம்பதி ஆம்புலன்ஸில் ஹனுமான் புகைப்படம் ஒட்டியிருந்ததால் அதில் பயணிக்க மறுத்துவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு வைரலாகி வருகின்றது. மேலும் இது ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி அறிக்கை என்றும் வைரல் ஸ்கிரீன் ஷாட்டில் இருத்தது.


மேலும் இன்ஷார்ட்ஸ் செய்தி தொடர்பாளர் இது போன்ற செய்தி அறிக்கையை வெளியிடவில்லை இது தவறானது என்பதைத் தெரிவித்தார். மேலும் இந்த வைரல் குற்றச்சாட்டு கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் தேடியபோது இந்த போலி குற்றச்சாட்டு கொண்ட புகைப்படங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வைரல் ஸ்கிரீன் ஷாட் போலியானது மற்றும் இது போன்ற ஒரு சம்பவம் நிகழவில்லை என்பதை BOOM கண்டறிந்துள்ளது. இன்ஷார்ட் செய்தி தொடர்பாளரும் இதையே தெரிவித்தார். இந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டுள்ளது என்பதை அவர் குறிப்பிட்டார்.

மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஹிந்துஸ்தான் செய்தி அறிக்கைகளைச் சோதனை செய்த போது இது போன்ற ஒரு செய்திக் கட்டுரையை அவர்கள் வெளியிடவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி அறிக்கையில் அதே ஹனுமான் புகைப்படம் கொண்ட ஆம்புலன்ஸ் கண்டறியப்பட்டது. ஆனால் அதற்கும் கேரளா தம்பதிக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அந்த புகைப்படம் பெங்களூருவில் எடுக்கப்பட்டுள்ளது மற்றும் அது கேரளாவில் எடுத்தது என்று தவறாக வைரலாகி வருகின்றது. மே 8 2021 இல் அது வெளிவந்துள்ளது.


வைரல் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது. வைரல் புகைப்படத்தில் குறிப்பிட்டது போல் எந்த செய்தி அறிக்கையிலும் தென்படவில்லை.


எனவே தற்போது வைரலாகி வரும் புகைப்படம் தவறாக குற்றச்சாட்டுகளுடன் வைரலாகி வருகின்றது.

source: https://www.boomlive.in/fact-check/fake-news-inshorts-article-kerala-couple-refused-ambulance-with-hanuman-sticker-factcheck-13152

Similar News