இந்திய ரூபாய் மதிப்பு பங்களாதேஷ் டாக்காவை விடக் குறைந்துவிட்டது - தவறான செய்தி பரப்பும் இடதுசாரிகள்!

Update: 2021-05-17 00:45 GMT

பல இடதுசாரி அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் சார்புகள் சமூக ஊடகங்களில் மோடி அரசாங்கத்திற்கு எதிராகவும் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தைக் குறிவைத்து தவறான செய்திகளைத் தெரிவிக்க முயன்றன. மேக்ரோ பொருளாதாரம் குறித்து தங்கள் புரிதல்களைத் தெரிவிக்கும் வகையில், பங்களாதேஷ் டாக்காவுக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து விட்டதாக குற்றச்சாட்டை இடதுசாரி முன்வைத்தது.


பங்களாதேஷ் டாக்கா மற்றும் இந்திய ரூபாயை ஒப்பிட்டு, டாக்கா ரூபாயை விட 1.12 முதல் 1.16 வரை உயர்ந்துள்ளது, இதனால் டகாவை ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து விட்டதாக இடதுசாரி அமைப்பின் ராஜு பாருலேகர் ஒரு வரைபடத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதேபோன்று மற்றொரு ட்ரோலர், அதே ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து வரலாற்றில் முதன் முறையாக இந்திய ரூபாய் விலை பங்களாதேஷ் டகாவுக்கு எதிராக குறைந்துள்ளது என்று டிவிட்டில் பதிவிட்டுள்ளார்.


மற்றொரு காங்கிரஸ் நபரும் இதே ஸ்கிரீன் ஷாட்டை பழைய புகைப்படத்துடன் பகிர்ந்து இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தது என்று தவறான செய்திகளைப் பரப்பினார். இதுபோன்று மற்றொரு டிவிட்டும் பகிரப்பட்டது. இவர்கள் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் தவறான செய்திகளை முன்வைக்கத் தொடங்கிவிட்டனர்.




இவர்கள் ஒப்பீட்டைத் தவறாகப் புரிந்து கொண்டு இந்த செய்திகளைப் பரப்பி வருகின்றன. உண்மையில் 1 INR என்பது 1.15 BDT க்கு சமமாகும். ஒரு இந்திய ஒரு ரூபாயை வாங்கவேண்டும் என்றால் 1.15 டாக்கா வேண்டும். இதேபாணியில், ஒருவர் இந்திய 100 ரூபாய் வேண்டும் என்றால் அவர் 115 பங்களாதேஷ் டாக்கா தேவைப்படும். எனவே வரலாற்று ரீதியாக இந்திய ரூபாய் மதிப்பு எப்பொழுதும் பங்களாதேஷ் டாக்காவை விட உயர்வாகவே உள்ளது. தற்போது இந்திய ஒரு ரூபாய் பங்களாதேஷ் 1.16 டாக்காவுக்குச் சமமாக உள்ளது.

இந்த நாணய மதிப்பீட்டின் குறைவான புரிதலைக் கொண்டு, பங்களாதேஷ் டாக்காவுக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பீடு குறைந்துவிட்டதாகத் தவறான செய்திகளை முன்வைக்க இடதுசாரிகள் முன்வைக்க முயன்றுள்ளனர்.


இவ்வாறு டாக்கா மதிப்பீடு ரூபாயை விட அதிகமாகவுள்ளது உள்ளது என்று தவறான செய்தியைப் பரப்புவது முதன்முறை அல்ல. இதேபோன்று கடந்தாண்டும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வெளிவந்தது.

source: https://www.opindia.com/2021/05/fact-check-no-indian-rupee-has-not-lost-against-bangladeshi-taka/

Similar News