கிராமத்துக்கு உள்ளே செல்வதற்குக் குடியிருப்பாளர்களால் முதல்வர் யோகி தடுக்கப்பட்டாரா? உண்மை என்ன ?
மே 16 உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கொரோனா தொற்று நிலைமை குறித்து ஆய்வு செய்தார். மேலும் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளின் குடும்பத்தைச் சந்தித்து அவர்களுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை நடைபெறுகிறதா என்பதையும் உறுதி செய்தார். மேலும் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாக்க முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்
மாநில யூத் காங்கிரஸ் தலைவர், ஓம்வீர் யாதவ், நடிகை நக்மா, மற்றும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் போன்ற சில எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் சிலர் மக்களுக்கு அறிவுரை வழங்கி தனது காரில் திரும்பிச் சென்றதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அவர்கள், அப்பகுதி மக்கள் உள்ளே செல்லவிடாமல் அந்த பகுதியைப் பூட்டி வைத்ததாகத் தெரிவிக்க முயன்றனர்.
"ஒரு வயதான நபர் யோகி யை மறித்து அவர் அப்பகுதிக்கு உள்ளே செல்லவிடாமல் தடுத்தார். மேலும் முதல்வர் பலமுறை கெஞ்சியும் அவர் வழிவிடவில்லை," என்று ஓம்வீர் யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதே குற்றச்சாட்டையும் நடிகை நக்மா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அவர்கள் பகிர்ந்த அந்த வீடியோவில் முதல்வர் கொரோனா வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டதும் கேட்டது. மேலும் அந்த பகுதி மக்கள் முதல்வருக்கு ஆதரவாகக் கோஷமிட்டதும் கேட்டது.