வெற்றிலைகள் கொரோனா தொற்றைக் குணப்படுத்த உதவுமா - வைரல் செய்தி உண்மையா?

Update: 2021-05-18 11:11 GMT

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகப் பெரிய பாதிப்பை நாடுமுழுவதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், சமூக ஊடகங்களில் பலர் இந்த தொற்றில் இருந்து குணமடைவதற்காகப் பல வீட்டு மருத்துவத்தைக் குணப்படுத்தலாம் என்று கூறி வருகின்றனர்.


அதே போன்று ஒரு வைரல் செய்தியாக தற்போது வெற்றிலையை உட்கொள்வதால் கொரோனா தொற்றைத் தடுக்கலாம் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகின்றது. மேலும் இதை Dr M R சர்மா பரிந்துரைத்ததாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் வெற்றிலையை உட்கொள்வதால் கொரோனா தொற்றைக் குணப்படுத்தலாம் என்ற குற்றச்சாட்டுப் போலியானது.

பல அறிக்கைகளின் படி, வெற்றிலை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியையும் அது உண்டாக்குகிறது. இருப்பினும் அவை கொரோனாவிற்கு எதிராகப் போராட உதவும் என்பதற்கான அறிவியல் பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை.

PIB உண்மை கண்டறியும் குழுவும் இந்த குற்றச்சாட்டை மறுத்து போலியானது என்பதைத் தெரிவித்து ஒரு டிவிட்டை வெளியிட்டது.

மேலும் உலக சுகாதார மையமும் தனது அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் இந்த செய்தி'தவறானது என்பதைத் தெரிவித்துள்ளது. ஒருவர் கைகளைச் சுத்தமாக வைத்திருக்கவும் மற்றும் சமூக இடைவேளையை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டது.


எனவே வெற்றிலையை உட்கொள்வதால் கொரோனா தொற்றைக் குணப்படுத்தலாம் என்ற வைரல் கூற்றுத் தவறானது ஆகும்.

source: https://newsmeter.in/fact-check/fact-check-betel-leaves-do-not-cure-or-prevent-covid-19-678324

Similar News