கொரோனா தடுப்பூசியை டெலெக்ராம் மூலம் முன்பதிவு செய்யலாம் - வைரல் செய்தி உண்மையா?

Update: 2021-05-20 05:49 GMT

கொரோனா தொற்றுக்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசி பதிவு செய்வது குறித்து தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. தற்போது தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்வதற்கு டெலெக்ராம் செயலி மூலம் செய்துகொள்ளலாம் என்று கூற்று வைரலாகி வந்ததது. இதுபோன்று செய்திகள் மக்கள் பதற்றமான சூழலை ஏற்கனவே எதிர்கொண்டிருக்கும் வேலையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்துகின்றது.


அந்த வைரல் செய்தியில், தற்போது கொரோனா தடுப்பூசியை டெலெக்ராமில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் அதற்கான எண்ணையும் அதில் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும் இந்த வைரல் செய்தி தவறானது ஆகும்.

இந்த வைரல் செய்தியை மறுத்து PIB ஒரு ட்விட்டை வெளியிட்டது. இந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டுள்ளது மற்றும் அதில் கொடுக்கப்பட்டுள்ள கணக்கும் அரசாங்கத்திற்கு உரியது இல்லை என்பதையும் கூறியிருந்தது.

மேலும் மக்கள் தடுப்பூசி முன்பதிவு செய்ய ஆரோக்கிய சேது செயலி, UMANG மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யவேண்டும் என்றும் அது கூறியது.

இந்த தடுப்பூசி இயக்கமானது இந்தியா முழுவதும் ஜனவரி 16 இல் தொடங்கப்பட்டது, தற்போது இயக்கத்தின் மூன்றாம் கட்டம் சென்று கொண்டிருக்கின்றது. இந்த தடுப்பூசி இயக்கமானது டிஜிட்டல் முறையில் அரசாங்கம் நிர்வாக செய்கிறது.


மேலும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, நாடு முழுவதும் இதுவரை 18.5 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

source: https://www.hindustantimes.com/india-news/no-covid-19-vaccine-appointment-via-telegram-centre-busts-fake-news-101621421151769.html

Similar News