பிரதமர் குறித்து அமெரிக்க நாளிதழில் வெளியானதாக போலி செய்தி - பிரபலங்களுக்கு சிக்கல்!
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல 'The Newyork Times' பத்திரிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சித்த செய்தி வந்ததாக சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பகிர்ந்து வந்தனர். ஆனால் அவ்வாறு எந்த செய்தியும் வெளியாகவில்லை என்றும் அது முற்றிலும் பொய் செய்தி என்பது தற்போது தெரிய வந்துள்ளதால் அந்த பொய் செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பிய காங்கிரஸ் மூத்த தலைவர் உள்ளிட்ட பிரபலங்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி உத்திரபிரதேசம் வாரணாசியில் சுகாதாரப் பணியாளர்கள் இடையே உரையாற்றினார். அப்போது இந்த இக்கட்டான காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக நின்று சேவை செய்துவரும் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத மக்களால் ஓரம் கட்டப்பட்ட கட்சியாக இருக்கும் காங்கிரஸ் பிரதமர் நரேந்திர மோடி முதலைக்கண்ணீர் வடிக்கிறார் என்று அவதூறு பரப்பி வந்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையாக இருக்கும் The Newyork Times பத்திரிகையில் இந்திய பிரதமர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பிரபல பத்திரிகையாள ஷோபா டே உட்பட பலர் சமூக வலைதளங்களில் இந்த தகவலை பகிர்ந்தனர். ஆனால் அது பொய்யான செய்தி என்றும் அவ்வாறு எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் சற்றும் சிந்தித்துப் பார்க்காமல் முற்றிலும் எடிட் செய்யப்பட்டு வெளியாகியுள்ள புகைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பரப்பி வருகிறது என்ற ஒரே காரணத்தினால் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் சார்பாக பொய் பிரச்சாரம் செய்வதற்காக ட்விட்டரில் tool kit இருப்பதாக அந்த கட்சியை சேர்ந்தவர்களே தெரிவித்திருக்கும் நிலையில் தற்போதும் பிரதமரை குறித்து அவதூறு செய்தி பரப்பி உள்ளனர் என்று தெரிய வந்துள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தப் பொய் செய்தியை பரப்பிய முக்கிய பிரபலங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.