கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் பிரச்சனை? தி இந்து செய்திக் கட்டுரையை மறுத்த இந்திய இராணுவம்.!

Update: 2021-05-25 06:31 GMT

ஞாயிற்றுக்கிழமை அன்று பிரபல செய்தி தளமான தி இந்து 'கல்வான் பள்ள தாகத்தில் சீன இராணுவத்துடன் சிறிய மோதல்(minor face off)" என்ற செய்திக் கட்டுரையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து அதனை மறுத்து இந்திய இராணுவம் தவறான செய்தி என்று அதனை நிராகரித்தது.


இந்து வெளியிட்ட செய்திக் கட்டுரையில், இந்த சம்பவமானது மே முதல் வாரத்தில் நடந்தாக தெரிவித்திருந்தது. மேலும் தனது கூற்றை உறுதி செய்ய ஒரு அரசாங்க அதிகாரியையும் மேற்கோள் காட்டி கூறியது. மேலும் மோதல்கள் இல்லை, இந்திய மற்றும் சீன இராணுவம் விரைவாக விலக்கப்பட்டது என்றும் அது கூறியது.

இந்த பேஸ்ஆப், இருதரப்பு ரோந்து படையினரும் வேறு ஒரு இடத்தில் இராணுவம் எல்லையைத் தாண்டி விட்டதா என்று சரிபார்க்கச் சென்ற போது நடந்தது என்று அந்த செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த அறிகையில், மூத்த அதிகாரி ரோந்து அல்லாத இடங்களுக்குப் பின்னால் சீனா முகாம்களை அமைத்திருப்பதாகவும் மற்றும் 2020 இல் இருந்து அங்குத் துருப்புகளை நிறுத்துவதை நிறுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும் அவ்வப்போது இரு தரப்பினரும் சந்தேகத்தின் பேரில் ரோந்து படையினரை அனுப்புவதாகவும் அவர் தெரிவித்தார். "இரு தரப்பினரும் துருப்புகளைக் குறைக்கவில்லை . மேலும் LAC யில் சீனா படைகளை மேம்படுத்தி வருகின்றது. கொரோனா தொற்றுக்கு குரிய கடமையில் ஈடுபட இந்திய இராணுவத்தை பின்னுக்கு இழுக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றது, இருப்பினும் அது நிராகரிக்கப்பட்டது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்திக் கட்டுரை வெளியிட்ட சில மணி நேரத்தில், இது தவறான குற்றச்சாட்டு என்று இந்திய இராணுவம் ஒரு ட்விட்டை வெளியிட்டது. "கல்வான் பள்ளத்தாக்கில் சீனா மற்றும் இந்தியத் துருப்புக்கு எதிரே சந்தித்துக் கொண்டதாக இந்து வெளியிட்ட செய்திக் கட்டுரை தவறானது.மே 2021 இல் முதல் வாரத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை," என்று அது ட்விட்டில் தெரிவித்திருந்தது.


மேலும், "கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமையைச் சரிசெய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் இந்த கட்டுரை உள்ளது," என்றும் அது குறிப்பிட்டது. "மேலும் இந்திய இராணுவம் குறித்தும் அதிகாரப் பூர்வ அறிக்கையை வெளியிடுமாறும் மற்றும் மூன்றாம் தரப்பு நபர்களை வைத்து அறிக்கையை வெளியிட வேண்டாம் என்றும் அது ஊடகத் துறையினரைக் கோரிக்கை வைத்துள்ளது.

Tags:    

Similar News