இந்தியா கொரோனாவில் இருந்து விடுபட ரத்தன் டாடா தனது முழு சொத்தை வழங்கத் தயாரா?வைரல் செய்தி உண்மையா?

Update: 2021-05-25 09:13 GMT

தற்போது நாட்டில் பெரிய அழிவை உண்டாக்கி வருகின்ற கொரோனா தொற்றை இந்தியாவிலிருந்து அகற்றத் தனது முழு சொத்தையும் செலவிடத் தயாராக உள்ளதாகத் தொழிலதிபர் ரத்தன் டாடா தெரிவித்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த இடுக்கு பரவலாகப் பரப்பப்பட்டு வருகின்றது.


"எனது சொத்து முழுவதும் தீர்ந்தாலும் பரவாயில்லை இந்தியா கொரோனா தொற்று அற்ற நாடாக மாறவேண்டும் என்று ரத்தன் டாடா தெரிவித்தார்," என்று அந்த இடுக்கில் இந்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்த செய்தியைக் கண்டறிய நியூஸ்மீட்டர் சமூக வலைத்தளத்தில் சோதனை செய்தது. ஆனால் அதுபோன்ற ஒரு செய்தி கிடைக்கவில்லை. இந்தியா கொரோனா அற்ற நாடாக மாற ரத்தன் டாடா தனது சொத்தை செலவிடவுள்ளதாக ஒரு செய்தி அறிக்கையும் கிடைக்கவில்லை. இந்த செய்தி உண்மையாக இருந்தால் பல பிரபல செய்தி ஊடகங்கள் இதனை வெளியிட்டிருக்கும்.

கொரோனா நிவாரணத்திற்கு டாடா குரூப் 1,500 கோடி வழங்கியுள்ளது. இதுதவிர, டாடா ஊழியர்கள் பல்வேறு திட்டங்களுக்கு தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். சமீபத்தில் டாடா குழுமம் தனது வலைத்தள பக்கத்தில், ஆக்சிஜென் உற்பத்தி மற்றும் தேவையை அதிகரிக்க இந்திய அரசாங்கத்திற்கு உதவுவதாகத் தெரிவித்திருந்தது.


இருப்பினும் ரத்தன் டாடா அல்லது டாடா குழுமம் இந்தியா கொரோனா வைரஸில் இருந்து விடுபடத் தனது முழு சொத்தையும் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கவில்லை. எனவே தற்போது வைரலாகும் செய்தி தவறானது ஆகும்.

Tags:    

Similar News