கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை சந்தித்த முதல் முதல்வரா ஸ்டாலின்? உண்மை என்ன?

Update: 2021-05-31 09:08 GMT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோயம்புத்தூர் சென்றபோது அங்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுக்கு பாதுகாப்பு கவச உடை அணிந்து சென்றதாகவும், இந்தியாவிலேயே ஒரு முதல்வர் கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை பார்வையிடுவது இதுவே முதல் முறை என்றும் ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டன.


ஆனால் உண்மை என்ன? கடந்த ஆண்டே கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங், ஹரியான  முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் கவச உடை அணிந்து கொரோனா வார்டில் நோயாளிகளைச் சந்தித்து ஆய்வு செய்தனர். அதேபோன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முழு கவச உடை அணிந்து கொண்டு கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளைச் சந்தித்து ஆய்வு செய்தார்.

 












தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கவச உடை அணியாமலேயே கொரோனா நோயாளிகளைச் சந்தித்த செய்திகளும் வெளியாகின. இவ்வாறிருக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் இந்தியாவிலேயே முதல் முறையாக கவச உடை அணிந்து கொண்டு வரும் நோயாளிகளை நேரடியாக சென்று சந்தித்ததாக ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டுள்ளன.


ஊடகங்கள் வெளியிட்ட இந்த செய்தியை சிறிதும் ஆராயாமல் சமூக ஊடகங்களிலும் பலர் பகிர்வதை காணமுடிந்தது. எந்த முதல்வரும் செய்யாததை தமிழக முதல்வர் செய்துள்ளார் என்று பலர் சமூக ஊடகங்களில் பெருமிதம் கொண்ட அதேவேளையில் முதல்வர் ஸ்டாலின் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் இடத்திற்கு செல்லவில்லை என்றும் ஒருநாள் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அவர் சென்றார் என்றும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


Tags:    

Similar News