அதிர்ஷ்டசாலிக்கு இலவச டாடா சஃபாரி! வைரல் செய்தி உண்மையா?

Update: 2021-06-07 09:45 GMT

தற்போது ஒரு வைரல் செய்தியாக டாடா மோட்டார்ஸின் லிங்க் ஒன்று வைரலாகி வருகின்றது. மேலும் அதில் 300 மில்லியன் கார் யூனிட் விற்பனையைக் கொண்டாடும் வகையில் அந்நிறுவனம் இலவச டாடா சஃபாரி கார்களை வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


ஆனால் இந்த வைரல் செய்தி போலியானது ஆகும். இது போன்று ஒரு அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிடவில்லை. இந்த லிங்க் போலி வலைத்தளத்தில் இருந்து வந்துள்ளது. மேலும் இந்த லிங்கில் டாடா மோட்டார்ஸின் லோகோ அல்லது அதன் நேரடி வலைப்பக்கத்துக்கோ செல்லவில்லை. இதன் மூலம் இது மோசடி லிங்க் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த லிஙக் கேள்விக்கு பதிலளித்தவுடன் ஒரு கிபிட் பெட்டியைத் திறக்கச் செய்கிறது. அது ஒரு வெற்றியாளருக்கு மறுபடியும் வாய்ப்பு வழங்குகிறது என்பதை நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது. இந்த லிங்க் போலியானது மட்டுமல்லாமல், தனிப்பட்ட நபரின் IP தகவல்களையும் பதிவு செய்கிறது.

இலவச டாடா சஃபாரி வழங்குவதாக டாடா மோட்டார்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிடவில்லை. இதுகுறித்து எந்த செய்தி அறிக்கையும் அல்லது அமைப்பும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடவில்லை. இதுபோன்ற தனிப்பட்ட தகவல்களைத் திருடும் இணைய லிங்கில் இருந்து விலகி இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.


எனவே இந்த வைரல் செய்தி மோசடிக்கானது என்பதைத் தெளிவாகக் காண்பிக்கிறது. அதுபோன்ற சலுகை எதுவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை.

Source: நியூஸ் மீட்டர்

Similar News