தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் சாயம் பூசும் நோக்கத்துடன் பரப்பப்படும் கடிதம் - வைரல் செய்தி உண்மையா?
சமூக வலைத்தளங்களில் ஒரு வைரல் செய்தியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத்கு கடிதம் எழுதியதாக அது தற்போது வைரலாகி வருகின்றது. அந்த கடிதம் ஜூன் 4 தேதியிட்டு வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
மேலும் அந்த கடிதத்தில் அமித் ஷா, கொரோனா தொற்றின் இரண்டாம் அலையைக் கையாண்ட முறை குறித்து உத்தரப் பிரதேச முதல்வரைப் பாராட்டியுள்ளார். மேலும் உத்தரப் பிரதேசத்தில் மேற்கு பக்கம் இன்னும் அதிக நபருக்குத் தடுப்பூசியைச் செலுத்தவும் அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 இல் உத்தரப் பிரதேசத்தில் நடக்கவிருக்கும் தேர்தலுக்கு வெற்றியாக இருக்கும் என்பதால் அதிகளவு தடுப்பூசியைப் பதிவு செய்யுமாறும் அதில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்த வைரல் செய்தியை மறுத்து அரசு ஒரு ட்விட்டை வெளியிட்டது. அந்த ட்விட்டில், "தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் செய்தி போலியானது ஆகும். மத்திய உள்துறை அமைச்சர் அதுபோன்ற ஒரு கடிதத்தை எழுதவில்லை," என்றும் அது குறிப்பிட்டது.
அரசாங்கம் பலமுறை இதுபோன்ற போலி செய்திகளை மறுத்து மக்களைப் பலமுறை எச்சரிக்கை செய்துள்ளது. மேலும் மக்களை இதுபோன்று போலி செய்திகளை நம்பவேண்டாம் என்றும், இது போன்று வரும் செய்திகளை அரசாங்க அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் சரிபார்க்கவும் அது கேட்டுக்கொண்டுள்ளது.