கோவிட்ஷீயீல்டு தடுப்பூசி ஒரு டோஸ் செலுத்தினால் போதும் - வைரல் செய்தி பின்னணி என்ன?

Update: 2021-06-08 06:55 GMT

சமூக ஊடகங்களில் தற்போது, கொரோனா தொற்றுக்கு எதிராகப் பாதுகாத்துக் கொள்ள கோவிட்ஷீயீல்டு தடுப்பூசியை ஒரு டோஸ் செலுத்திக் கொண்டால் போதும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதாகப் பல இடுக்குகள் குறிப்பிடுகின்றன. மேலும் இரண்டு டோஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இதுபோன்ற வைரல் செய்திகளால் மக்களிடையே பெரியளவில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.


இந்த வைரல் குற்றச்சாட்டுப் போலியானது ஆகும். கோவிட்ஷீயீல்டு தடுப்பூசி குறித்த அட்டவணையை மத்திய அரசாங்கம் மாற்றவில்லை மற்றும் இரண்டு டோஸ் தடுப்பூசியும் எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும்.

ஏப்ரல் 26 இல் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்த வீடியோவை மத்திய அரசு வெளியிட்டது. முதல் டோஸ் நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக உதவும் ஆனால் இது நீண்ட காலம் நீடிக்காது. இரண்டாவது பூஸ்டர் என்று அழைக்கப்படுகின்றது, இது அதிக ஆன்டிபாடியை உருவாகும்.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க இரண்டாவது டோஸ் முக்கியம் என்று Dr.குலேரியா தெரிவித்தார்.

இந்த வீடியோவானது உண்மை கண்டறியும் குழுவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.


ஒரு டோஸ் மட்டும் செலுத்திக் கொள்வதுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதாக எந்த செய்தி அறிக்கையும் குறிப்பிடவில்லை. உண்மை கண்டறியும் குழுவும் இது குறித்த ஒரு ட்விட்டை வெளியிட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வதற்கான இடைவெளி காலம் 12 வாரம் ஆகும் மற்றும் இரண்டாவது டோஸ்எடுத்துக்கொள்வது அவசியம் ஆகும்.


எனவே, கோவிட்ஷீயீல்டு ஒரு டோஸ் எடுத்துக் கொண்டால் போதுமென்று மத்திய அரசு தெரிவித்ததாக வைரலாகும் செய்தி தவறானது மற்றும் போலியானது ஆகும். அப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

Source: News Meter

Similar News