குழந்தைகளிடையே கொரோனா பாதிப்பு எப்படி? வதந்திகளை நம்பி பயப்பட வேண்டாம்!

Update: 2021-07-01 01:15 GMT

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் போது, வரவிருக்கும் காலங்களில் தொற்றினால் குழந்தைகள் அதிகம் பாதிப்படைவார்களா என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.

2 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்குத் தடுப்பூசியின் சோதனை தொடங்கப்பட்டிருப்பதாகவும், அதன் முடிவுகள் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வெளிவரும் என்றும் தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

வரவிருக்கும் அலைகளில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச அல்லது இந்தியாவின் எந்த ஒரு தரவும் தெரிவிக்கவில்லை என்று ஜூன் 8-ஆம் தேதி நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறினார்.

தொற்றின் இரண்டாவது அலையின் போது ஆரோக்கியமான குழந்தைகள் லேசான பாதிப்புடன் வீட்டுத் தனிமையிலேயே குணமடைந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் இணை நோய்களையோ அல்லது குறைந்த நோய் எதிர்ப்பு ஆற்றலையோ பெற்றிருந்தனர்.

பாதிக்கப்படும் குழந்தைகளுக்குத் தேவையான சிகிச்சைகள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

தெரிவித்தார். குழந்தைகளுக்குத் தொற்று ஏற்படக்கூடும் என்றும், ஆனால் அது கடுமையாக இருக்காது. குறைந்த சதவீத குழந்தைகள் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டி வரலாம்.

எதிர்வரும் அலைகளில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு குழந்தைகளிடையே கொரோனா மேலாண்மையின் வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த ஜூன் 18-ஆம் தேதி வெளியிட்டது.

அறிகுறிகள், பல்வேறு சிகிச்சை முறைகள், கண்காணிப்பு மற்றும் மேலாண்மை, நோய் தடுப்பு நடவடிக்கைகள், ஆலோசனைகள், முகக்கவசங்களின் பயன்பாடு போன்ற அனைத்து விவரங்களும் இந்த விரிவான வழிகாட்டு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Similar News