தவறான குற்றச்சாட்டுடன் வைரலாகும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகைப்படம் - பின்னணி என்ன?
தற்போது சமூக ஊடகங்களில் ஒரு வைரல் செய்தியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந் கீழே விழுந்து வணங்குவது போன்று ஒரு புகைப்படம் வைரலாகி வந்தது. மேலும் சிலர் அந்த புகைப்படத்தை வைத்து, ஜனாதிபதி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தலைவணங்குவதாகக் குற்றம் சாட்டி பகிர்ந்து வருகின்றனர்.
அந்த புகைப்படத்தில் ஜனாதிபதி விமானத்தில் இருந்து இறங்கியவுடன் குனிந்து வணங்குவது போன்றும் மற்றும் அவரை முதல்வர் யோகி வரவேற்பது போன்றும் இருந்தது.
பலர் இந்த புகைப்படத்தை வைத்து ராம்நாத் கோவிந் பிற்பட்ட ஜாதியைச் சேர்த்தவர் என்பதால் வணங்குகிறார் என்றார் குற்றம் சாட்டினர். பலர் இந்த புகைப்படத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
ஆனால் உண்மையில் இந்த புகைப்படம் உத்தரப் பிரதேசத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறப்பிடமான கான்பூர் மாவட்டத்தில் ப்ருந்க்ஹ் கிராமத்தில் எடுக்கப்பட்டது. அவர் முதல்வர் யோகியை வணங்கவில்லை.