இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கா? வைரல் வீடியோ உண்மையா?

Update: 2021-07-04 13:12 GMT

தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாட்டில் உச்சத்தை அடைந்ததை அடுத்து மீண்டும் தினசரி தொற்று எண்ணிக்கையில் சரிவைச் சந்தித்து வருகின்றது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கிவருகின்றது. மேலும் கொரோனா அலையின் மூன்றாம் அலையைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்குவதிலிருந்து எச்சரிக்கை விடுத்துள்ளார் சுகாதார வல்லுநர்கள்.


இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதில் நாடுமுழுவதும் மீண்டும் முழு ஊரடங்கைப் பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கவுள்ளதாக ஒரு வீடியோ வலம்வருகின்றது.

அந்த வைரல் வீடியோ, தற்போது கொரோனா தொற்றின் மூன்றாம் அலையின் அட்சதை கருத்தில் கொண்டு பான்-இந்தியா ஊரடங்கு குறித்து பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சர்வதேச உண்மை கண்டறியும் குழு, இந்த வைரல் வீடியோ தவறானது என்றும், இதுபோன்ற ஒரு அறிவிப்பை மத்திய அரசாங்கம் எடுக்கவில்லை என்பதையும் அது தெரிவித்துள்ளது.

இந்த வீடியோ குறித்து ஆய்வு செய்தபோது, முதலில் இது ஜூன் 30 இல் பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது மற்றும் அது சில செய்தி சேனல்களின் புகைப்படங்களைத் திருத்தப்பட்டுப் பகிரப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இதுபோன்று ஊரடங்கு குறித்துப் பல போலி செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்ததைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இருப்பினும் இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு விதிப்பதாக இல்லை என்றும் மத்திய அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும் தேவை ஏற்பட்டால், மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் ஊரடங்கு விதிப்பது குறித்து முடிவு எடுக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Similar News