அயோத்தி ராமர் கோவிலின் வெளிப்புற வளாகம் இது தான் என பரவும் வீடியோ - உண்மை என்ன?

Update: 2021-07-07 02:30 GMT

தற்போது யூடூப் வைரல் வீடியோவாக உத்தரப் பிரதேச அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் வெளிப்புறம் வளாகம் காட்டும் வீடியோ வாட்ஸ்ஆப்பில் வைரலாகி வருகின்றது.


இந்த வைரல் வீடியோ தவறானது ஆகும். உண்மையில் இந்த வைரல் வீடியோ குஜராத்தில் அமைத்துள்ள சமண கோவிலின் வெளிப்புறம் ஆகும் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் கட்டப்பட்டு வருகின்ற ராமர் கோவில் இல்லை.

Full View

இந்த வைரல் வீடியோ தொடர்பாகச் சுழி ஜெயின் கோவிலின் புகைப்படத்தை நியூஸ்மீட்டர் சோதனை செய்த போது, குஜராத்தில் அமைத்துள்ள கோவிலின் புகைப்படங்களைக் காணமுடிந்தது. இதனையே சுற்றுலா வலைத்தளமும் உறுதி செய்துள்ளது. மேலும் குஜராத்தில் உள்ள சுழி ஜெயின் கோவிலின் உள்ளூர் மக்களைத் தொடர்பு கொண்டபோது அவர்களும் இதையே உறுதி செய்தனர்.

இருப்பினும், அயோத்யாவில் ராமர் கோவில் இன்னும் கட்டி முடிக்கவில்லை. கட்டுமான பணி இன்னும் நடந்து கொண்டே இருக்கின்றது. மேலும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தில் கட்டுமான பணி நடந்து கொண்டிருப்பதையே தெளிவாகக் காட்டுகின்றது.


எனவே ராமர் கோவில் கட்டுமான பணி இன்னும் முடிவடையவில்லை. தற்போது வைரலாகி வரும் வீடியோ குஜராத் சமண கோவிலின் புகைப்படம். எனவே இந்த வைரல் செய்தி தவறானது ஆகும்.

Source: நியூஸ் மீட்டர்

Similar News