ஆயுதப் படையின் தலைமையகங்களை இடமாற்றம் செய்ய திட்டமா? உண்மை என்ன?

Update: 2021-07-08 01:00 GMT

கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் பல்வேறு போலி செய்திகள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டிவிட்டர், வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் பரப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தற்போது அதேபோன்று, பல மத்திய ஆயுதப் படையின் தலைமையகத்தை(CAPF) மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி டிவிட்டரில் பரவி வருகின்றது.


அந்த வைரல் செய்தியில் மத்திய உள்துறை அமைச்சகம், எல்லை பாதுகாப்புப் படையின் தலைமையகத்தை டெல்லியில் இருந்து சண்டிகர்க்கு இடமாற்ற, மத்திய ரிசெர்வே போலீஸ் படையின் தலைமையகத்தை டெல்லியில் இருந்து நாயா ராய்ப்பூர்கு இடமாற்றவும், ITBP தலைமையகத்தை டெல்லியில் இருந்து டெஹ்ராடூன்கு இடமாற்றம்பலமுறை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று மற்றும் சில படைகளின் தலைமையகத்தை டெல்லியில் இருந்து வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யவுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த இடமாற்றம் 3 டிசம்பர் 2021 குள் முடிவடையும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வைரல் செய்தியை தொடர்ந்து, "இந்த செய்தி போலியானது. இதுபோன்ற ஒரு திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலிக்கவில்லை," என்று PIB தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


இதுபோன்று கொரோனா தொற்று பரவ தொடங்கிய காலகட்டத்தில் இருந்து வெளிவந்த தவறான மற்றும் போலி செய்திகளை அரசாங்கம் கண்டறிந்து மக்களை பலமுறை எச்சரிக்கை செய்துள்ளது.

Similar News