பிரான்சில் இந்திய சொத்துக்கள் முடக்கப்படுகிறதா? ஊடகங்களின் பரவி வரும் செய்தியின் உண்மைநிலை!

Update: 2021-07-12 02:20 GMT

பிரான்சில் இந்திய சொத்துக்கள் முடக்கப்படுவது குறித்த செய்திகளுக்கு நிதி அமைச்சகத்தின் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், பாரிசில் உள்ள இந்திய அரசிற்கு சொந்தமான சொத்துக்களை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் முடக்கி உள்ளதாக ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.

எனினும், இது தொடர்பான எந்த ஒரு அறிவிக்கை, ஆணை அல்லது தகவலை ஃபிரான்ஸ் நீதிமன்றத்திடமிருந்து இந்திய அரசு பெறவில்லை.

இந்தியாவின் நலனைக் கருதி, இது போன்ற எந்த ஒரு ஆணை கிடைத்தாலும், சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து, தேவையான சட்டபூர்வமான தீர்வுகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கைகளை எடுக்கும்.

கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹேக் மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த சர்வதேச நடுவர்மன்ற தீர்ப்பை ஒதுக்கி வைக்குமாறு ,மார்ச் 22, 2021 அன்று அரசு ஏற்கனவே விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளது. ஹேக் நீதிமன்றத்தில் இந்தியா தனது வாதத்தை தீவிரமாக முன்வைக்கும்.

இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பது குறித்து கெய்ர்ன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், உறுப்பினர்களும் இந்திய அரசை அணுகி உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. சட்ட வரம்பிற்கு உட்பட்ட சுமுகமான தீர்வுக்கு அரசு தொடர்ந்து ஆதரவளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News