பாரதத்தை சிறுமைப்படுத்தும் நோக்கில் கட்டுரை வெளியிட்ட 'தி இந்து' நாளிதழ் : மெளனமாக சாதித்து காட்டிய மத்திய அரசு!

Update: 2021-07-18 10:48 GMT

இந்தியாவில் ஜூலை மாத இறுதிக்குள் 40 கோடி தடுப்பூசிகளை செலுத்த இயலாது என்று தி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியை பொய்யாக்கும் வண்ணம் தற்போது ஜூலை மாதம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையில் இந்தியாவில் 40 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

பிப்ரவரி மாதம் 2021ஆம் ஆண்டு தி இந்து நாளிதழில் செய்தி ஒன்று வெளியானது. அதில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதை செய்தியாக வெளியிட்டு அதில் புள்ளிவிவரம் ஒன்றையும் வெளியிட்டது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அவர்கள் திட்டமிட்ட அளவிலான தடுப்பூசியை செலுத்த இயலவில்லை என்றும் இதனால் இந்தியாவின் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ள ஜூலை இறுதிக்குள் 40 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற இலக்கு ஒரு போதும் சாத்தியமில்லாத ஒன்று என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.

தற்போது ஜூலை முடிவதற்கு இன்னும் 14 நாட்கள் இருக்கும் நிலையில் இந்தியா 40 கோடி தடுப்பு ஊசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது. இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பிரத்தியேக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி இந்தியாவில் இதுவரை 40,49,31,715 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.


இதனையும் தி இந்து நாளிதழ் பிப்ரவரி மாதம் வெளியிட்ட செய்தியையும் இணைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் இந்து நாளிதழை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Similar News