பிரதமர் மோடி பற்றி பொய் செய்தியை பரப்பிய பொய்யர் பொன்வண்ணன் - திராவிட மடலோ?
பிரதமர் மோடி குறித்து பொய் செய்தியை பரப்பி, விமர்சனம் செய்த நடிகர் பொன்வண்ணனை சமூக வலைதளவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
நாட்டில் பிரதமர் மோடி குறித்தும், மத்திய அரசு குறித்தும் பல்வேறு அவதூறுகள் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது.
அதன் வரிசையில், "முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியாவிடை நிகழ்ச்சியில், பிரதமர் மோடி முன்னான் குடியரசுத் தலைவரை மதிக்காமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்த வண்ணம் இருந்துள்ளார்" என்ற மிகப்பெரிய வடிகட்டின பொய்யை சில சமூக வலைதளவாசிகள் பரப்பின.
பின் அந்த காணொளி எடிட் செய்யப்பட்ட காணொளி என்றும், உண்மையான காணொளியை பல இணையதளவாசிகள் பரப்பி, பொய் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில், தமிழ்த் திரைப்பட நடிகர் பொன்வண்ணன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "குடியரசு தலைவரை வழியனுப்பும் நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெடுத்து கும்பிட்டதை மதிக்காமல், போட்டோவுக்கு பிரதமர் போஸ் கொடுத்ததை நான் பார்த்தேன்" என்று அந்த மிகப்பெரிய பொய்யை பொன்வண்ணனும் கூறியதையடுத்து, சமூக வலைதளவாசிகள் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.