வடஇந்தியாவில் நீட் தேர்வு காப்பி அடித்து எழுதப்பட்டதா? சோஷியல் மீடியாவில் பரவும் வதந்தி! உண்மை இதோ!

Update: 2022-08-09 06:56 GMT

வட இந்தியாவில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து எழுதுவதை பாருங்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் "வடநாட்டில் நீட் தேர்வு சிறப்பாக எழுதும்பொழுது எடுக்கப்பட்டது. இப்படிதான் வடநாட்டில் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் தேர்வாகி வருகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.




 


அந்த வீடியோவை பார்த்தால் நீட் தேர்வு எழுதுபவர்கள் போல இல்லை. வீடியோவில் மாணவர் ஹால் டிக்கெட்டை எடுத்து காண்பிக்கிறார். அதில் பாடலிபுத்ரா பல்கலைக் கழகம், பி.ஏ தேர்வு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. Nalanda sodh sensthan என்ற கல்லூரியில் படிக்கிறார். தேர்வு எழுதும் இடம் Allama Iqbal College Biharsharif என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 இதன் மூலம் இவர்கள் நீட் தேர்வு எழுதியவர்கள் இல்லை என்பது தெளிவானது.இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று பார்த்தால் பீகார் மாநிலம் நாலந்தாவில் மாணவர்கள் இளங்கலை தேர்வு எழுதிய போது எடுக்கப்பட்டது என்று சில செய்திகள் கிடைத்தன. 




வட இந்தியாவில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் என்று பகிரப்படும் வீடியோ பாடலிபுத்ரா பல்கலைக் கழக இளநிலை தேர்வின் போது எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




 



Similar News