பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக செய்தியை திரிக்கும் ஊடகங்கள்

Update: 2022-08-10 02:04 GMT

நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்பை மேம்படுத்த ஒன்றிய அரசு தரப்பில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அளவிலான நிதியும், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மிகக்குறைந்த அளவிலான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக youtrun ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  

" கேலோ இந்தியா திட்டத்தின் " கீழ் மாநில வாரியாக விளையாட்டு உள்கட்டமைப்பு தொடர்பாக ஒதுக்கப்பட்ட திட்டங்களின் நிதி குறித்து பதில் அளிக்குமாறு சிவசேனா கட்சியின் எம்.பிக்களான அரவிந்த் கன்பத், சஞ்சய் ஜாதவ், கிருபால் பாலாஜி துமானே, விநாயக் ராவத், தேல்கர் கலாபென் மோகன்பா உள்ளிட்டவர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகஸ்ட் 2-ம் தேதி பதில் அளித்து உள்ளார். அதில் மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரம் வெளியிடப்பட்டது. 



அதனை ஆதாரமாக கொண்டு பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டதாக செய்தி திரிக்கப்பட்டுள்ளது. 

உண்மை என்னவெனில், விளையாட்டை ஊக்குவிக்கும் பொறுப்பு முதன்மையாக மாநில அரசிடம் உள்ளது. மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கிறது. மேலும் மத்திய அரசு, மாநில அரசு கொடுக்கும் Proposalகளின் அடிப்படையில் விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்க நிதியுதவி வழங்குகிறது. அதாவது மாநிலங்கள் எவ்வளவு நிதி கேட்டதோ அதன் அடிப்படையிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு சலுகை செய்யப்பட்டது போல செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 




 


 




Similar News