வாடகை வீட்டிற்கும் ஜிஎஸ்டியா? மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை அப்படியே திரித்த ஊடகங்கள் - உண்மை இதுதான்!

Update: 2022-08-15 06:16 GMT

ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகை வீட்டில் குடியிருப்பவர் மாத வாடகை வழங்கும்போது ஜிஎஸ்டி வரியாக 18 சதவீதம் செலுத்த வேண்டும் என்று என்டிடிவி இணையதளத்தில் வெளியானது தவறானது என்று மத்தியஅரசு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

இந்த செய்தியை மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய அரசின் பிஐபி(PIB) ட்விட்டரில் என்டிடிவியின் செய்தி குறித்து தெரிவித்து, இது தவறான தலைப்பில, குழப்பும் வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்து குறித்து விளக்கம் அளித்துள்ளது.

1. குடியிருப்பு பகுதியை அதாவது வீட்டை வர்த்தக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடும்போதுதான் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.

2. வீட்டை அல்லது குடியிருப்புபகுதியை தனிநபர்களுக்கோ அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கோ வாடகைக்கு விட்டிருந்தால் அதற்கு ஜிஎஸ்டி வரி இல்லை.

3. நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது பங்குதாரர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக குடியிருப்பை வாடகைக்கு எடுத்தாலும் ஜிஎஸ்டி வரி இல்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

Similar News