காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பரப்பிய வதந்தி - மத்திய அரசை பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் செய்தி

Update: 2022-08-18 06:28 GMT

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் பழங்குடியின குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையை குறிப்பிட்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், வந்ததி பரப்பி உள்ளார். விருதுநகரை நாடாளுமன்ற உறுப்பினரான இவர், ஆகஸ்ட் 14 அன்று உத்தரபிரதேசத்தில் ஒரு எஸ்சி சிறுவன், பானையில் இருந்து தண்ணீர் குடித்ததற்காக ஆசிரியரால் தாக்கப்பட்டு இறந்தார் என கூறி உள்ளார். 

உண்மை என்ன?

இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி , இந்த சம்பவம் காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில் நடந்தது. உத்தரபிரதேசத்தில் அல்ல என்பதை எங்கள் விசாரணையின் போது நாங்கள் கண்டுபிடித்தோம். தனது பானையில் உள்ள தண்ணீரைக் குடிப்பதற்காக, ஆசிரியரால் உடல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 9 வயது தலித் சிறுவன் அகமதாபாத் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆசிரியர் சைல் சிங், 40, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது கொலை மற்றும் பட்டியல் சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலோரில் 9 வயது குழந்தை இறந்ததை ராஜஸ்தான் முதல்வர் ஒப்புக்கொண்ட போதிலும், உத்தரபிரதேசத்தில் இந்த சோகம் நடந்ததாக காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பொய்யான தகவலை பரப்பினார்.

 




Similar News