ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான அவதூறு செய்திக் கட்டுரை - ஆதாரம் கொடுக்க முடியாமல் மூக்குடைந்த ஊடகம்!

Update: 2022-09-14 01:58 GMT

அமெரிக்காவை சேர்ந்த VICE மீடியா நிறுவனத்தின் மூத்த நிருபர் பல்லவி பண்டிர் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக எழுதிய கட்டுரையின் URL-ஐ, அடுத்த உத்தரவு வரும் வரை முடக்கி வைக்குமாறு கோர்ட் உத்தரவிட்டது. 

ஈஷா அறக்கட்டளை மற்றும் சத்குரு மீது தவறான, ஜோடிக்கப்பட்ட, பொய்யான மற்றும் சரிபார்க்கப்படாத பல குற்றச்சாட்டுகளை கட்டுரையாக வெளியிட்ட VICE ஊடக குழுவிற்கும் அதன் மூத்த நிருபருக்கும் எதிராக ஈஷா அறக்கட்டளை அவதூறு வழக்கு தொடுத்தது.

ஜூன் 23 தேதியிட்ட செய்தி, தவறான தகவல்கள் மற்றும் அவதூறுகளால் நிறைந்துள்ளது என்று ஈஷா அறக்கட்டளை வாதிட்டது. கட்டுரையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை நிரூபிக்கும் ஆர்.டி.ஐ.களின் அதிகாரபூர்வ பதில்கள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் பொதுத்தளத்தில் உள்ள சம்பந்தப்பட்ட துறையின் ஆவணங்கள் உட்பட தேவையான அனைத்து ஆவணங்களையும் ஈஷா அறக்கட்டளை வழங்கியது.

கட்டுரையை முழுவதுமாக திரும்பப் பெறவும், இதுபோன்ற பொய்யான அறிக்கைகளையும், அப்பட்டமான தவறான தகவல்கள் வெளியிடுவதை நிறுத்தவும் மற்றும் தவறான தகவலை வெளியிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவும் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

ஈஷா அனுப்பிய சட்டப்பூர்வ நோட்டீஸ்க்கு VICEஊடகத்தினரிடம் இருந்து முறையான பதில் ஏதும் வரவில்லை. 

Input from: Dinamalar

Similar News