மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளின் வீட்டிற்கே சென்று அவர்களுக்கு மாதந்தோறும் மருந்து மாத்திரைகள் வழங்குவர் என தி.மு.க., அரசு தெரிவித்தது. ஆனால், இத்திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளன.
பெரும்பாலான நோயாளிகளுக்கு தொடர்ந்து மருந்து பொருட்கள் வழங்கப்படுவதில்லை என கூறுகின்றனர். டிசம்பர் 29ல் இத்திட்டத்தின் கீழ், ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு, மருத்துவ பெட்டகத்தை வழங்கியதாக, அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டிருந்தது.
அப்படி ஒரு கோடி பயனாளிகளின் விபரங்கள் உள்ளனவா என விசாரித்தபோது, எந்த விதமான புள்ளிவிபரக் குறிப்பும் இல்லை என, மருத்துவத் துறை அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வந்துள்ளன.
அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய, வலி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை திட்டத்தில் ஒரு வாகனத்தை மட்டும் கூடுதலாக்கி, இந்த அரசு, மக்களைத் தேடி மருத்துவம் என்று மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தி வருகிறது.
ஆட்சிக்கு வந்து, 20 மாதங்கள் முடிவடைந்த பின்னும் முந்தைய ஆட்சியின் மீது குறைகள் சொல்லியே விளம்பர ஆட்சி நடத்தி வரும் அரசு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை எவ்வளவு ரூபாய் செலவிட்டுள்ளது என்பதையும் ஒரு கோடி பயனாளிகளின் முழு விபரங்களை வெளியிட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Input From: EPS Twitter