வட இந்தியர்கள் தமிழர்களுடன் மோதுவது போன்ற போலி வீடியோக்களை பரப்ப வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை!

Update: 2023-02-16 02:52 GMT

தமிழகத்தில் வட இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே தகராறு என்ற தலைப்புடன் வீடியோக்களை பரப்புவதற்கு எதிராக  காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழர்கள் மற்றவர்களால் தாக்கப்பட்டதாக பலர் கூறி, வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் கருத்துக்களை வெளியிட்டனர்.

சில வாரங்களுக்கு முன்பு ஒரு சில தமிழ் ஆண்களை தமிழர் அல்லாதவர்கள் விரட்டியடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. திருப்பூர் தொழில்துறையில் பணிபுரியும் தமிழர்கள் அல்லாதவர்கள், தமிழர்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் தமிழர்கள் அல்லாதவர்களுக்கு வேலை வழங்க வேண்டாம் என்று பலர் கேட்டுக் கொண்டனர். இந்த விவகாரம் கைமீறிப் போனதும், இது தனிநபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு மட்டுமே என போலீஸார் விளக்கம் அளித்தனர்.

இந்த சம்பவத்தில் புகார் அளிக்க யாரும் முன்வராததால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆனால் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதால், தமிழர்கள் அல்லாதவர்கள் தமிழர்களை தாக்குவது போல் திரிக்கப்பட்டது.

இந்த வீடியோ வைரலானதையடுத்து, தகராறில் ஈடுபட்ட இரண்டு தமிழ் அல்லாத இளைஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து , அவர்களைத் தூண்டிய தமிழ் இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.

Input From; Hindupost

Similar News