கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறதா? பொய்யுரைகளுக்கு மத்திய அமைச்சரின் விளக்கம்!

Update: 2023-03-14 00:45 GMT

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி துவங்கியது. 

பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழக கேந்திரிய பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுவது போன்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிகள் நடந்தது. இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முற்றுப்புள்ளி வைத்தார். 

தமிழகத்தில் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 15 பள்ளிகளில் தமிழ் பாடம் கற்பிக்கப்படுகிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 63,809 மாணவர்களில் 6,589 மாணவர்கள் தமிழ் படிக்கின்றனர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் உருவாக்கும் பாடத்திட்டத்தை பின்பற்றுகிறது. நாடு முழுவதும் உள்ள மாணவர்களை கருத்தில் கொண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுவதால் கூடுதல் மொழியாக மட்டுமே மாநில மொழிகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

15 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் விருப்பம் தெரிவித்தால்மாநில மொழிகள் பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவர்கள் விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் 15 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார். 

Input From: SansathTV



Similar News