மக்கள் தகவல் எங்கும் லீக் ஆவதில்லை: பரவிய வதந்தி என்ன? மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம்!

Update: 2023-03-17 01:21 GMT

டிஜி யாத்ரா (Digi Yatra) செயலியில் பயணிகள் தொடர்பான தகவல்கள் அவர்களது சொந்த சாதனத்திலேயே சேமிக்கப்படுகிறது. மையப்படுத்தப்பட்ட தரவு சேமிப்பு அமைப்பில் இந்தத் தகவல்கள் சேமிக்கப்படுவதில்லை. த

கவல்கள் அனைத்தும் மறைபொருளாக்கம் செய்யப்பட்டு பயணியின் ஸ்மார்ட் மொபைல் ஃபோனிலேயே சேமிக்கப்படுகிறது. டிஜி யாத்ரா செயலியில் உள்ள தகவல்கள் தேவைப்படும் போது பயணிகளுக்கும், சம்பந்தப்பட்ட விமான நிலையங்களுக்கும் மட்டுமே தெரியும் வகையில், இந்தத் தகவல்கள் பகிரப்படுகிறது.

டிஜி யாத்ரா செயலி விமான நிலையங்களில் பயணிகளை முக அடையாள தொழில்நுட்பம் மூலம் அடையாளம் காணும் முயற்சியாகும். இது மறை பொருளாக்கம் செய்யப்பட்டுள்ளதால், வேறு எந்த நிறுவனத்தாலும் இதில் உள்ள தகவல்களை பயன்படுத்த முடியாது. இந்த நடைமுறை தன்னார்வ அடிப்படையிலானது என்பதுடன், தடையற்ற பயண வசதியை ஏற்படுத்தித் தருகிறது.

இது தொடர்பாக, பயணி ஒருவரின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ள சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா தமது பதிவில் கூறியிருப்பதாவது:



“பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய தரவுகள், எந்தவொரு மையப்படுத்தப்பட்ட தரவு சேமிப்பு அமைப்பிலோ அல்லது டிஜி யாத்ரா அறக்கட்டடையிலோ சேமிக்கப்படுவதில்லை. பயணியின் சொந்த தொலைபேசியில் பாதுகாப்பான முறையில் டிஜி யாத்ரா செயலியின் அமைப்பில் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. பேரபடும் எந்தவொரு தகவலும், பிற இடங்கள் எதிலும் சேமிக்கப்படுவதில்லை என உறுதியளிக்கப்படுகிறது.

Input From: Swarajya

Similar News