அண்ணாமலைக்கும், வானதிக்கும் மோதலை ஏற்படுத்த நடக்கும் சதி? சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் தகவல்! இது தான் உண்மை!
“அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம். பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகினாலும் கவலை ஏதும் இல்லை. கட்சிக்காரர்களை வேவு பார்ப்பது, ஆடியோ, வீடியோ லீக்ஸ் என கட்சிக்கு அவரால் உண்டான அவப்பெயரே மிச்சம். அண்ணாமலையால் கட்சி இங்கு ஒரு அங்குலம் கூட வளரவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி நிச்சயம் தொடரும். வானதி சீனிவாசன், எம்.எல்.ஏ, பாஜக தேசிய மகளிரணி தலைவர்” என தினமலர் வெளியிட்டது போல ஒரு நியூஸ் கார்டு சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
வானதி சீனிவாசன் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் பற்றி தினமலர் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளப்பக்கத்தில் தேடியபோது அப்படி ஏதும் வெளியாகியிருக்கவில்லை. அவர்களுடைய பக்கத்திலும் இதுகுறித்த செய்தி எதுவும் வெளியாகியிருக்கவில்லை. அண்ணாமலை குறித்து அவர் பேசியதாக தினமலர் செய்தி எதுவும் வெளியிட்டிருக்கவில்லை.
வானதி சீனிவாசனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இது தவறான தகவல். பரவும் செய்தி உண்மையில்லை” என்று விளக்கமளித்தார்.
அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் என்று வானதி சீனிவாசன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட், பாஜக கட்சிக்கும் தற்போது நிலவும் சூழலை திசை திருப்பி கட்சியினரிடையே மோதலை உண்டாக்க பரப்பப்பட்ட போலி செய்தி என்பது உறுதியாகிறது.