அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை கதிகலங்க செய்த நியூஸ் கார்டு: உண்மை என்ன? சொன்ன ஆளு தான் வேறு!

Update: 2023-03-22 00:47 GMT

2023 -2024 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில், கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ₹45000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. வரும் ஆண்டில் ₹50000 கோடி வருமானம் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



அமைச்சரின் முழு பட்ஜெட் உரையும் தந்தி தொலைக்காட்சி யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது. இந்த உரையில் எந்த ஒரு இடத்திலும் டாஸ்மாக வருமானம் குறித்து பிடிஆர் பேசி இருக்கவில்லை. ஆனால் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் இந்த தகவலை கூறியுள்ளார் என்பதை அறிய முடிந்தது.

கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ₹45000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. வரும் ஆண்டில் ₹50000 கோடி வருமானம் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனும் கருத்தை அவர் கூறினார். 

தொடர்ந்து தேடியதில் நிதியமைச்சரின் பட்ஜெட் உரை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது. அந்த உரையை முழுமையாக ஆராய்கையில், அதிலும் டாஸ்மாக் குறித்த தகவல் இடம்பெற்றிருக்கவில்லை.

இதன் மூலம் டாஸ்மாக் வருமானத்தை பெருக்கும் என நிதி துறை செயலாளர் தான் சொன்னாரே தவிர, அமைச்சர் சொல்லவில்லை என்பது உறுதியாகிறது. 

யார் சொன்னால் என்ன பொருள் ஒன்றுதானே.  டாஸ்மாக் வருமானம் உயர்த்தப்படப்போவது நடக்கும் . 



 



Similar News