மதுப்பிரியர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா அறிவித்தாரா?
சென்னையில் மதுப் பிரியர்களுக்கு ‘ஈவினிங் ஸ்நாக்ஸ்’ வழங்கப்படும் என்று மேயர் பிரியா சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
வைரலாகும் தகவல் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது. சென்னையில் மாலை நேர சிறப்பு வகுப்பு மற்றும் குறைதீர் கற்பித்தல் வகுப்பில் பங்கேற்கும் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 – 2024 கல்வியாண்டின் ஜனவரி மாதத்திலிருந்து ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை புதிய தலைமுறை நியூஸ்கார்டாக வெளியிட்டிருந்தது.
இதனை எடிட் செய்து போலியாக வேறு கார்டு உருவாக்கி உள்ளனர்.
மதுப்பிரியர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா அறிவித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாக தெரிகிறது.