ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் பணம் பெற்ற அரசியல் தலைவர்கள் என்ற பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பல்வேறு அரசியல் தலைவர்களின் பெயர்களுடன் கூடிய பட்டியல் இடம்பெற்றுள்ளது.
”மக்களைத் தூண்டி விட்டு ஸ்டெர்லைட்டை மூடிவிட்டனர்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்திய நிகழ்வொன்றில் பேசியதைத் தொடர்ந்தே இந்த தகவல் பரப்பப்பட்டு வருகிறது என்பதை அறிய முடிந்தது.
இந்த தகவல் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்தே பரவி வருகிறது என்பதை அறிய முடிந்தது.
அரசியல் கட்சிகள் ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்ற நிதி குறித்து இடம்பெற்றுள்ளதே தவிர தனித்தனியான அரசியல் பிரமுகர்கள் குறித்த எந்த தகவல்களும் வெளியாகியிருக்கவில்லை.
புதிய தலைமுறையின் பெயரில் இதுபோன்ற போலியான தகவல் பரப்பப்படுகிறது, யாரும் நம்ப வேண்டாம். பிற தொலைக்காட்சிகள் பெயரிலும் இதேபோன்ற தகவல் பரப்பப்படுகிறது என அந்த தொலைக்காட்சி நிர்வாகமே விளக்கம் அளித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் பணம் பெற்ற அரசியல் தலைவர்கள் என்று பரவுகின்ற தகவல் உண்மை இல்லை. ஆதாரம் அற்றது என தெரிய வருகிறது.