திராவிட கழகமா? திராவிட விடுதலை கழகமா? பாவம் அவங்களே கன்பியூஸ் ஆகிட்டாங்க!

Update: 2023-05-03 01:00 GMT

மாநாட்டுக்கு ரூ.500 கேட்டு மிரட்டிய திராவிடர் கழக நிர்வாகிகள் என்று தந்தி டிவி செய்தி வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சேலத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் மையக் கருத்து, நடக்கும் தேதி உள்ளிட்ட விவரங்களை அக்கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களுக்குத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திராவிடர் கழகத்தின் மாநாட்டுக்காக அக்கட்சி நிர்வாகிகள் கட்டாய வசூலில் ஈடுபட்டதாகத் தந்தி டிவி செய்தி வெளியிட்டிருந்தது.

தவறான செய்தியை வெளியிட்டதால் வீடியோ பதிவைத் தந்தி டிவி நீக்கிவிட்டது. ஆனால், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்த பதிவை தந்தி டிவி நீக்காமல் விட்டுவிட்டது.




சேலம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளிக் கடைக்குள் புகுந்த திராவிட விடுதலைக் கழகத்தினர் தங்கள் கட்சி மாநாட்டுக்குக் கட்டாயமாக ரூ.500 தர வேண்டும் என்று வற்புறுத்தினர். தன்னால் ரூ.100 தான் தர முடியும் என்று அந்த கடைக்காரர் கூறியுள்ளார்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. வசூலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடை உரிமையாளர் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினார். போலீசார் வந்து சமாதானம் செய்தனர். மேலும் பணம் கேட்டு மிரட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்று பாலிமர் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காவல் நிலையத்தில் திராவிட விடுதலைக் கழகத்தினர் மீது புகார் வந்துள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மாநாட்டுக்குக் கட்டாய நிதி வசூல் செய்தவர்கள் திராவிடர் கழகத்தினர் இல்லை என தெரிய வருகிறது.  

Similar News