என்னங்க சொல்றீங்க? திருமாவளவனை திமுக உறுப்பினர் என்று குறிப்பிட்டதா சன் நியூஸ்? உண்மை இதோ!
அண்ணே திருமாவளவன் நீங்க திமுக உறுப்பினர் இல்லை தானே அப்பறம் ஏன் இந்த சன் நியூஸ் காரன் இப்படி சொல்லி இருக்கான்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அதில் திமுக உறுப்பினர் திருமாவளவன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அண்மையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ‘திமுககாரர் போல் பேசுகிறீர்கள்’ என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கூற, அது பெரும் சர்ச்சையானது. இதனை தொடர்ந்து இந்த தகவல் பரவி வருகிறது.
திருமாவளவனை திமுக உறுப்பினர் என்று குறிப்பிட்டு சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாக வைரலாகும் நியூஸ்கார்டில் திமுக உறுப்பினர் எனும் வாசகம் மட்டும் தனியாக தெரிகிறது. இது போலியான நியூஸ்கார்ட் என்பதை நம்மால் உணர முடிந்தது.
இருப்பினும் பலர் உண்மை என நம்பி பரப்பி வருகின்றனர். சன் நியூஸ் சமூக ஊடகப் பக்கங்களில், தமிழகத்தில் அதிமுகவின் தலைவராக மோடியும், செயலாளராக அமித்ஷாவும் உள்ளனர் -விசிக தலைவர் திருமாவளவன் கடும் விமர்சனம்! என்று தலைப்பிட்டு சன் நியூஸ் பிப்ரவரி 28, 2021 அன்று நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்தை காண முடிந்தது.
அதனை எடிட் செய்து இப்படி மாற்றி உள்ளனர். திருமாவளவனை திமுக உறுப்பினர் என்று குறிப்பிட்டு சன் நியூஸ் செய்தி செய்தி வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என தெரிய வருகிறது.