அண்ணாமலை பெயரில் தர்மபுரி எம்பி செந்தில் குமார் பரப்பிய பொய் செய்தி!

Update: 2023-05-14 01:22 GMT

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க தரப்பில் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும், தேர்தல் இணைப் பொறுப்பாளர்களாக மன்சுக் மாண்டவியா மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

அண்ணாமலை ஏற்கனவே கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய நிலையில், அங்கு தமிழர்கள் அதிகம் உள்ள தொகுகளில் பிரச்சாரம் செய்ய அண்ணாமலை நியமிக்கப்பபட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் அவருக்கு அங்கு மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பெங்களூரு 28, உத்தர கன்னடா 6, தாவணகெரே 7, ஷிவமொகா 7, உடுப்பி 5, சிக்கமகளூரு 5, கோலார் 6, மாண்டியா 7, ஹாசன் 7, தட்சிண கன்னடா 8 ஆகிய 10 மாவட்டங்களின் 86 தொகுதிகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், அண்ணாமலை பிரச்சாரம் செய்த உத்தரகன்னடா மாவட்டம் கிட்டூர் தொகுதியின் ஒரு பூத்தில் பாஜகவிற்கு வெறும் 10 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக நியூஸ் 7 தமிழ் வெளியிட்டுள்ளதாக ஒரு செய்தியை திமுக எம்பி பரப்பி வருகிறார். 

 நியூஸ் 7 தமிழ் ஊடகம் இந்த செய்தியை போலி தகவல் என அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. 




 





Similar News