சிறுவன் ஒருவன் கையில் மது பாட்டிலை வைத்துக் கொண்டு, அதை குடித்து கீழே விழுவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. திமுகவின் ஆட்சியே இதற்கு காரணம் என்றும் கூறி இந்த வீடியோ பரப்பப்பட்டு வருகின்றது.
திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக வைரலான வீடியோ ஆய்வு செய்யப்பட்டது. இத்தேடலில் timli_king_bhilpradesh_௧௫ எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் இந்த வீடியோ ஏப்ரல் 29 அன்று பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. அதில் இந்த வீடியோ பொழுபோக்குகாக உருவாக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்ததில் வைரலாகும் வீடியோவுடன் சேர்த்து, இதுபோன்று பல வீடியோக்களை உருவாக்கி இருப்பதை காண முடிந்தது.
ஆனால் அவற்றில் பெரும்பாலும் குஜராத்தி மொழி பாடல்களை பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பார்க்கையில் இந்த வீடியோவானது தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டதல்ல என அறிய முடிகின்றது.
திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ ஒரு புனைவு வீடியோ என்பதும், இவ்வீடியோவை அடிப்படையாக வைத்து சிறுவர்கள் மது அருந்தவதாக பரப்பப்படும் தகவல் தவறானது என தெரிய வருகிறது.