ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டின் சாலை பரவி வரும் போட்டோ!

Update: 2023-05-31 04:47 GMT

ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டின் சாலை என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


இதன் உண்மைதன்மை குறித்து தேடினால் வேறு விதமான முடிவுகள் கிடைக்கிறது. LANDO Zawawi – Brotherhood Malaysia எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் டிசம்பர் 26, 2019 அன்று வைரலாகும் இப்படம் மலேசியாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.

Full View


வைரலாகும் இப்படம் எப்போது, எங்கே எடுக்கப்பட்டது என்பது குறித்த தெளிவான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருவதை நம்மால் காண முடிகின்றது.

 ஸ்டாலின் தலைமையிலான திமுக 2021ஆம் ஆண்டே ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தது. இதனடிப்படையில் பார்க்கையில் திமுகவிற்கும் வைரலாகும் இப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

‘ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டின் சாலை’ என்று குறிப்பிட்டு ஒன்று வைரலாகி வரும் படம் பழைய புகைப்படம் என்பதும், ஸ்டாலின் ஆட்சிக்கும் அப்படத்திற்கும் தொடர்பில்லை. 



 




Similar News