ஒடிசா விபத்தால் விமான டிக்கெட் விலை ஏற்றம் என மக்களை குழப்பும் அரசியல்வாதிகள் - தகவலை திரித்தது அம்பலம்!

Update: 2023-06-05 03:46 GMT

சென்னையில் இருந்து புவனேஷ்வருக்கு 50,000 ரூபாய் என விமானக் கட்டணம் ஏற்றி கொள்ளையடிக்கிறார்கள் என்பதாகப் பதிவுகள் வெளியானது. 

உண்மை என்னவெனில் விமானம் புக் செய்யும் செயலிகளில் எப்போது தேடினாலும் முதலில் விலை மலிவாக இருப்பதைக் காட்டும். கீழே போகப்போக விலை அதிகமாக இருப்பதைக் காட்டும்.


 



உதாரணமாக , சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் தேடினால் நேரடி விமானம் 4500 ரூபாய் எனக் காட்டும். பயண நேரம் 1 மணி நேரம்.

அதுவே சில நேரங்களில் டெல்லி போய் அங்கிருந்து சென்னை வருவது போல காட்டும். சென்னை - டெல்லி - கோவை பயண நேரம் 23 மணி நேரம். பயணக்கட்டணம் 39,000 ரூபாய் என்றும் காட்டும்.

இப்போது சென்னை புவனேஸ்வர் விமான பயணத்துக்கு இப்படி ஒரு மோசடியான தகவலை எடுத்து ஸ்கீரின் ஷாட் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

ஜூன் 4 மற்றும் ஜூன் 5 க்கான சென்னை - புவனேஸ்வர் டிக்கட் கட்டணம் ஸ்கிரீன் ஷாட் கீழே உள்ளது. ஜூன் 5ம் தேதிக்கு 8611 , 9197 தான். ஒரு விஷயத்தை விமர்சிக்க வேண்டுமெனில் சரியான முறையில் , சரியான தரவுகள் எடுத்து விமர்சிக்க வேண்டும். திரிக்கக் கூடாது.




 


Similar News