ஆந்திராவில் எடுக்கப்பட்ட வீடியோவை அண்ணாமலை யாத்திரையில் எடுக்கபட்டதாக பரப்பும் திமுக ஐடி விங்!

Update: 2023-08-03 06:42 GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள நடை பயணத்தில் பங்கேற்ற பெண்கள் மது அருந்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

காரில் பெண்கள் மது அருந்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் அவர்கள் பேசுவது எடிட் செய்யப்பட்டு, பாடல் ஒலிப்பது போல் மாற்றப்பட்டுள்ளது.  “குடியும் கும்மாளமுமாக நடக்கும் அண்ணாமலையின் பாவ யாத்திரை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதை வைத்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், அண்ணாமலையின் நடைபயணத்தில் பங்கேற்ற பெண்கள், காரில் அமர்ந்து மது அருந்துவதாக பலரும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மையில் பெண்கள் மது அருந்தும் வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு வைரல் ஆனது. ஆந்திராவில் பெண்கள் மது அருந்துவதாக இந்த வீடியோ வைரல் ஆகியிருந்தது. 

அண்ணாமலை தன்னுடைய நடைபயணத்தை ராமேஸ்வரத்தில் தொடங்கினார். இந்த வீடியோவோ 2021ம் ஆண்டு மார்ச் மாதம் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அப்போது தமிழக பாஜக தலைவராகக் கூட அண்ணாமலை இல்லை. இதை அடிப்படையாக வைத்து, இந்த வீடியோ தவறான தகவல் சேர்த்துப் பரப்பப்பட்டுள்ளது என்று உறுதியாகிறது.

 

Full View






Similar News