மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்ட மோசடி குறித்து திரித்து செய்தி பரப்பும் ஊடகங்கள்!

Update: 2023-09-02 02:41 GMT

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 23, 2018 அன்று பி.எம். ஜான் ஆரோகியா யோஜனா மருத்துவக் காப்பீடு திட்டத்தை வெளியிட்டார்.

இந்திய குடும்பத்தினருக்கு வருடத்திற்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீட்டை இந்த திட்டம் உறுதி செய்கிறது. மருத்துவ தேவைகளுக்கு பணமில்லா அணுகலை இந்த திட்டம் வழங்குகிறது. அரசு மற்றும் அரசு சாராத அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இந்த திட்டத்தின் வாயிலாகப் பயன்பெறலாம்.

முதல் 3 நாள்களைத் தொடர்ந்து, சிகிச்சை பெறும் அடுத்த 15 நாள்களும் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் தேவைப்படும் மருத்துவ செலவை ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் செலுத்தும்.

குடும்பத்தின் அளவு, வயது, பாலினம் ஆகியவற்றிற்கு எந்த வரம்பும் இல்லை.முன்னே கண்டறியப்பட்ட நோய்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

அரசு பட்டியலிட்டுள்ள மருத்துவமனைகளில் மட்டுமே இந்த இலவச சேவைகள் கிடைக்கும். மருந்துகள், பொருள்கள், கண்டறியும் சேவைகள், மருத்துவரின் கட்டணம், அறை கட்டணங்கள், அறுவை சிகிச்சை கட்டணங்கள், OT, ICU கட்டணங்கள் போன்ற சுமார் 1,929 சேவைகளில் சிகிச்சை தொடர்பான அனைத்து செலவுகளையும் இந்த காப்பீடு திட்டம் பார்த்துக்கொள்ளும்.

பிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக இந்திய தலைமை கணக்காயர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களுக்கு சிகிச்சை வழங்கியதாகவும், திட்டம் நடைமுறைக்கு வராதா காலத்திற்கு முன்பே சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

ஒரே கைபேசி எண்ணில் பல லட்சம் பேருக்கு, மருத்துவக் காப்பீடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல பயனாளிகளுக்கு, மருத்துவமனைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு (discharge) அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு, அவ்வறுவை சிகிச்சைக்களுக்காவும் காப்பீட்டு நிறுவனங்களில் இருந்து காப்பீட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய அரசு தான் காரணம் என எதிர்கட்சிகளும், அவை சார்ந்த ஊடகங்களும் செய்தி வெளியிடுகின்றன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி விளக்கம் அளித்துள்ளார். 



Similar News