இடது சாரிக் கூட்டணி பேரணிக்கு அலைகடல் கூட்ட வைரல் புகைப்படங்கள் - உண்மையா?

Update: 2021-03-02 13:40 GMT

மேற்கு வங்காளத்தில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, இடது முன்னணி கட்சிகளான காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை அன்று திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க விற்கு எதிராகக் கொல்கத்தாவில் மைதானத்தில் பெரிய அணிவகுப்புகளை நடத்தியது. பலர் சமூக வளைத்ததில், பிரிகேட் பரேட் மைதானத்தின் அணிவகுப்பின் புகைப்படங்கள் என்று மிகப் பெரிய கூட்டத்தின் புகைப்படங்கள் இரண்டை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் காங்கிரஸ் தலைவர்களின் பலர் டிவிட்டர் பக்கத்தில் கூட, "மேற்கு வங்காளத்தில் பிரிகேட் மைதானத்தில் INCindia மற்றும் CPIM அணிவகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது பலர் அதில் முன்வந்து கலந்து கொள்கின்றனர். இது மேற்கு வங்காளத்தில் உள்ள மக்களின் கோபத்தைக் காண்பிக்கின்றது. மேலும் டெல்லி மற்றும் கொல்கத்தா ஆட்சியர்களுக்குக் கூட இது அதிர்ச்சியைத் தரும்," என்று குறிப்பிட்டிருந்ததைக் காண முடிந்தது.




மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த காங்கிரஸைப் பலரின் டிவிட்டரில் இடுக்கில் ஞாயிற்றுக்கிழமை பிரிகேட் மைதானத்தில் நடந்த அணிவகுப்பு என்று கூறி ஒரு புகைப்படத்தில் வெளியிட்டு பின்னர் அதனை நீக்கினர்.

இது குறித்து ஆராய்ந்த இந்தியா டுடேயின் AFWA, காங்கிரஸ்-ISF பேரணியில் ஏராளமானோர் காணப்பட்டாலும் பகிரப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் பிப்ரவரி 2019 இல் நடந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் என்பதைக் கண்டறிந்துள்ளது. மேலும் தேடுதலில் 2019 இல் பல வலைத்தளங்களில் இடுக்குகளில் இந்த இரு புகைப்படங்களும் காணப்பட்டன.



"2019 பொதுத் தேர்தலை முன்னிட்டு மாநிலத்தில் இடதுசாரியைச் சேர்ந்த பல ஆர்வலர்கள் இடது முன்னணியின் அணிவகுப்பில் பங்குபெறுகின்றனர்," என்று ஆராயப் பட்ட புகைப்படங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் போட்டோ கிரெடிட் "சாய்கட் பால்/ பசிபிக் ப்ரெஸ் / அலாமி லைவ் நியூஸ் முதலியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதே புகைப்படங்கள் CPIM யின் வாராந்திர செய்தித்தாளான "பீப்பிள்ஸ் டெமாகிறேசி" என்ற இதழில் 2019 பிப்ரவரி 10 இல் பகிரப்பட்டுள்ளது. மேலும் தற்போது வைரலாகி வரும் புகைப்படம் மற்றும் வலைத்தள புகைப்படங்களை ஒப்பிடுகையில் பல குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் தென்பட்டதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

இந்த வலைத்தளங்களின் படி, பிரிகேட் பரேட் மைதானத்தில் நடத்தப்பட்ட அணிவகுப்பு 2019 பொதுத் தேர்தலுக்கு முன்பு பிப்ரவரி 3 இல் இடது முன்னணி பேரணியில் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். பிப்ரவரி 28 இல் காங்கிரஸ் மற்றும் ISF பிரிகேட் பரேட் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தாலும் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள் அதே மைதானத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு இடது முன்னணி பேரணியில் எடுக்கப்பட்டுள்ளது.

Similar News