மீண்டும் ஒருமுறை இடதுசாரிகளின் பிரச்சார தளமான தி வயர் (The Wire) போலி செய்தி வெளியிட்டதற்காகப் பிடிக்கப்பட்டுள்ளது. இம்முறை அது புதிதாக டிஜிட்டல் மீடியாக்களுக்கு IT சட்டத்தின் கீழ் வெளியிட்ட புதிய வழிமுறைகள் குறித்து தவறான செய்தியை வெளியிட்டுள்ளது. இருப்பினும் அந்த செய்தியின் உண்மை, தகவல் அமைச்சகத்தின் உண்மை கண்டறியும் குழுவால்9PIB) கண்டுபிடிக்கப்பட்டது. தி வயர், தகவல் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தலைமையில் சுய ஒழுங்குமுறையைப் பார்ப்பதற்கான குழுவை அமைக்கிறது என்று குற்றம் சாட்டியது.
"அந்த குழுவானது MIB அமையாது மற்றும் அது வெளியீட்டாளர்களால் அமைக்கப்படும். அந்த குழுவை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள் அல்லது சிறந்த நபர்கள் அதனைத் தலைமை தாங்குவர்," என்று PIB தெரிவித்தது.
தி வயர் முன்வைத்த குற்றச்சாட்டில், "10, 11 மற்றும் 12 விதியின் கீழ் இடைத்தரகர்கள் சுய ஒழுங்குமுறையைப் பார்ப்பதற்குக் குழுவை அமைக்கவேண்டும் மற்றும் அதன் மேற்பார்வை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இருக்கவேண்டியுள்ளதாக," குற்றம்சாட்டியது.
மேலும் அது, "சுய ஒழுங்குபடுத்தும் குழுவானது சுதந்திரமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது, உண்மையில் அது MIB யின் கீழ் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் அமைக்கப்படுவதால் அந்த சுதந்திரம் பறிக்கப்படுகின்றது. மேலும் ஒருதலைபட்சமாகச் செயல்பட MI&B ஓய்வுபெற்ற நீதிபதியைக் குழுவை தலைமை தாங்க அமைகிறது, " என்றும் குறிப்பிட்டது.