வைரலாகும் கடிதம்! உண்மையா?

Update: 2021-03-09 05:01 GMT

சமூக ஊடகங்களில் போலியாகப் பல செய்திகள் பரவலாகப் பரவி வருகின்றன. மேலும் அதனைப் பலரும் சரிபார்க்காமல் பகிர்ந்து வருகின்றனர். முன்னரும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 'இந்து ராஷ்டிராவுக்கு' அவரது பங்கினை பாராட்டி ஒரு கடிதம் எழுதியதாகப் போலி கடிதம் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது.


அதனைத் தொடர்ந்து தற்போது பிரதமர் தற்போது அயோத்தியில் கட்டப்படும் சர்வதேச விமான நிலையத்துக்கு ஒப்புதலளித்து மற்றும் அதற்காக 1,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. மேலும் யோகி ஆதித்யநாத்தின் கட்சிக்கான கடின உழைப்பையும் பாராட்டுவது போன்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.

இதே கடிதம் பல டிவிட்டர் பயனாளர்களால் பகிரப்பட்டு,"மோடி அரசாங்கத்தின் உண்மை வெளிப்பட்டது, பா.ஜ.க நாட்டை இந்து தேசமாக மாற்ற முயலுகிறது," என்று கூறப்பட்டு வந்தது. இதே போன்று ஒரு கடிதம் 2020 ஆகஸ்டிலும் பரவலாகப் பகிரப்பட்டது. அதனை PIB உண்மை கண்டறியும் குழு போலியானது என்பதைக் கூறியது.


இரண்டு கடிதத்தையும் ஒப்பிடுகையில் முதல் வரியும் மற்றும் சில சில வரிகள் ஒத்துப்போவதைக் கண்டறிய முடிந்தது. கிரிக்கெட் வீரர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தேதி, மாதம், வருடம் வேறு விதமாக குறிப்பிடப்பட்டிருந்தது. கிரிக்கெட் வீரர்களுக்கு அனுப்பிடக் கடிதத்திலும் மற்றும் யோகி ஆதித்யநாத்துக்கு உண்மையில் பிரதமர் மோடி அனுப்பிய கடிதத்திலும் கீழே பெறுநரின் முகவரி கீழே குறிப்பிடப்பட்டிருந்தது.


மேலும் பல செய்தி அறிக்கைகளின் அறிக்கைப் படி, அயோத்தியில் கட்டப்படும் சர்வதேச விமான நிலையத்துக்குப் பிப்ரவரி 26 இல் அனுமதியளிக்கப்பட்டது, இது வைரல் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் தேதிக்கு முன்னராகும்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாவட்ட நிர்வாகம் 1,000 கோடி ஒதுக்கியுள்ளது மற்றும் மத்திய அரசாங்கம் 250 கோடி ஒதுக்கியுள்ளது என்பதைக் குறிப்பிட்டார். மேலும் உத்தரப் பிரதேசத்தின் உண்மை கண்டறியும் குழுவும் இந்த கடிதம் போலியானது என்பதை உறுதி செய்ய டிவிட்டர்க்கு எடுத்துச் சென்றது. பிரதமர் மோடியின் பெயரில் போலியான கடிதம் சமூக ஊடகங்களில் பரவப்பட்டு வருகிறது என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிகிறது.

Similar News