ராஜஸ்தானில் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறையா? உண்மை என்ன ?

Update: 2021-03-11 00:45 GMT

இடதுசாரிகளின் ஊடக நிறுவனமான NDTV ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தது. அதில் ராஜஸ்தானில் கொரோனா தொற்றுநோய்க்கான தடுப்பூசி குறைவாக உள்ளது என்று மத்திய அரசாங்கத்திற்கு ஒரு அவசர அறிக்கையை வெளியிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகள் போலியானது என்று PIB ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.



அந்த அறிக்கையில் ராஜஸ்தான் நாளைக்குள் தடுப்பூசி வழங்குவதை நிறுத்தவில்லை என்பதைக் குறிப்பிட்டது. "உண்மையில் ராஜஸ்தானில் தற்போது கொரோனா தொற்றுநோய்க்கான தடுப்பூசி குறைவாக இல்லை. ராஜஸ்தானுக்கு 37.61 லட்ச தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது, நேற்று இரவு வரை 24.28 லட்ச தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டுள்ளது," PIB விளக்கமளித்தது.


மேலும், "மத்திய அரசாங்கம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசி இருப்புகள் குறித்து தினமும் கண்காணித்து வருகின்றது மாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப அதனை வழங்கியும் வருகின்றது," என்றும் கூறியது. மேலும் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறையாக உள்ளது என்னும் கட்டுக்கதையையும் DD நியூஸ் விலக்கியது.


உண்மைகள் குறித்துக் கண்டறியப்பட்ட பின்னர், NDTV ஒரு அறிக்கையை வெளியிட்டது, "ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கூற்றுக்கேற்ப செய்தி வெளியிட்டதாகத் தெரிவித்தது. அவர், "எங்களுக்கு மூன்று நாட்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் உள்ளன மேலும் மார்ச் மாதத்தில் தொடர 60 லட்ச தடுப்பூசிகள் கோரப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் வழங்காவிட்டால் இது நிறுத்தப்படும்..," என்று கூறினார்," என்று தெரிவித்து வீடியோவையும் இணைத்திருந்தது.




 காங்கிரஸில் மார்ச் 9 நிலவரப் படி, 1883 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் மற்றும் 2,789 இறப்புகள் பதிவாகியுள்ளது. ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் 5.85 லட்ச டோஸ் இருக்கின்றது என்று கூறினார், PIB அவர்களிடம் 13.33 டோஸ்கள் இருக்கின்றது என்பதைக் கண்டறிந்தது. NDTV அறிக்கையின் படி ஒரு நாளைக்கு 2.5 லட்ச மக்களுக்குச் செலுத்தப்படுகின்றது. மேலும் தற்போது வைத்திருக்கும் டோஸ்கள் மூலம் தொடர்ந்து ஐந்து நாட்கள் செலுத்தமுடியும். மேலும் மாநிலத்தை மத்திய அரசாங்கம் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது மற்றும் அவசரத்துக்கு 85000 தடுப்பூசிகளையும் வழங்கியுள்ளது.

Similar News