ஹரியானா முதல்வர் குறித்துப் பரப்பப்படும் தவறான புகைப்படம்..உண்மை என்ன ?

Update: 2021-03-14 02:10 GMT

மார்ச் 10 இல் ஹரியானாவில் மனோகர் லால் கட்டர் தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் ஹரியானா சட்டமன்றத்தில் காங்கிரஸ் முன்வைத்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வென்றது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க-JJP கூட்டணி 55 வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றது, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 32 வாக்குகளே பெற்றது. அதனைத் தொடர்ந்து ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் மற்றும் முன்னாள் ஹரியானா முதலமைச்சரும் மற்றும் காங்கிரஸ் தலைவருமான பூபேந்திர சிங் ஹூடா இருவரும் இணைந்திருந்த புகைப்படம் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின் எடுக்கப்பட்டதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.




 

பல பயனர்கள் அந்த புகைப்படத்தை, "இன்றைய புகைப்படம் யார் யாருடன் இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. மேலும் அரசியலில் இருமுகங்கள் கொண்ட பாம்புகள் அதிகரித்துள்ளன," என்ற கூற்றுடன் பகிரப்பட்டு வருகின்றது.



இந்த புகைப்படம் குறித்த உண்மையைக் கண்டறிந்த நியூஸ்மீட்டர், தற்போது குற்றச்சாட்டுடன் வலம்வரும் புகைப்படம் 2019 இல் இருந்து இணையதளத்தில் உள்ளது மற்றும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானது என்று கண்டறிந்துள்ளது. மேலும் அந்த புகைப்படம் குறித்து டெக்கான் ஹெர்லாண்ட் ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டிருந்தது. மேலும் அது 2019 இல் வெளியிடப்பட்டிருந்தது.




 இந்த புகைப்படமானது 26 நவம்பர் 2019 இல் சண்டிகர் சட்டமன்றத்தின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் 2019 இல் இணையதளத்தில் உள்ளது என்பதால், தற்போது ஹரியானாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புடன் தொடர்புப்படுத்திக் கூறிவரும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் போலியானது ஆகும்.

Similar News